காரைக்கால் அடுத்த கிழகாசாக்குடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 01ம் தேதி அன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதனை அடுத்து இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மகா பூர்ணாஹதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.