காரைக்கால் மாவட்டத்தில் சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று வெப்பச் சலனம் காரணமாக காரைக்காலில் உள்ள நகர பகுதி மற்றும் திருநள்ளாறு, அம்பகரத்தூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு மிதமான மழை முதல் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.