முட்டை எங்கே என கேட்ட மாணவன் மீது தாக்குதல்

50பார்த்தது
முட்டை எங்கே என கேட்ட மாணவன் மீது தாக்குதல்
திருவண்ணாமலை போளூர் அருகே சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட மாணவன் மீது சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் முட்டை இல்லை என கூறுகிறீர்கள் என்று கேள்வி கேட்டதால், “ஏன் சமையலறை சென்று பார்த்தாய்" எனக் கூறி சிறுவனை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் தாக்கியுள்ளனர். துடைப்பத்தால் தாக்கிய செய்தி வெளியான நிலையில், சமையல் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தும், 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கல்வி அலுவலர் சாமி முத்தழகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி