கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து 8 பெண்கள் பலி

85பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம், நாந்தேட்டில் உள்ள அல்லேகானில் இன்று பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கிணற்றில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் தாராபாய் ஜாதவ், துருபதா ஜாதவ், மீனா ரவுத், ஜோதி சரோட், சௌத்ராபாய் பர்டே, சரஸ்வதி புராத் மற்றும் சிம்ரன் காம்ப்ளே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டிராக்டரில் மொத்தம் 12 பேர் பயணம் செய்ததாக தகவல் உள்ளது. இந்த பெண்கள், விவசாய பணிகளுக்கு சென்றபோது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது.

நன்றி: சக்கல் மீடியா

தொடர்புடைய செய்தி