காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட
ஸ்ரீ கோதண்டராம பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ விழா கோதண்டராமர் பலவண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்து வீதியுலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகா தீபாரனை செய்விக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.