கோவை: பைக் முகப்பு விளக்குக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு!
சிங்காநல்லுார், நீலிக்கோணம்பாளையம் பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் 1. 5 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது. பைக் உரிமையாளர் பாம்பு பிடிக்கும் வீரர் அமீனுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். அமீன் இரு சக்கர வாகனத்தின் முகப்பு விளக்கை கழற்றி உள்ளே சிக்கி இருந்த சிறு பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். மழைக்காலம் என்பதால் குடியிருப்பு பகுதிகளில் தேவையற்ற குப்பை சேர்க்க வேண்டாம் புதர் மண்டிய பகுதிகளை அகற்ற வேண்டும் குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் தென்பட்டால் அடித்துக் கொல்லக்கூடாது தீயணைப்புத் துறையினர் அல்லது பாம்புப்பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என அமீன் வேண்டுகோள் விடுத்தார்.