சூலூர்: 24 தாழ்தள பேருந்துகளை துவைக்கி வைத்து அமைச்சர்

57பார்த்தது
சூலூர்: 24 தாழ்தள பேருந்துகளை துவைக்கி வைத்து அமைச்சர்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் புதிதாக 24 தாழ்தள பேருந்துகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், கோவை மண்டலத்திற்கு 100 எண்ணிக்கையில் புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தாழ்ந்த சொகுசு பேருந்துகளில் முதல் கட்டமாக 24 தாழ்தள சொகுசு பேருந்துகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இந்த பேருந்துகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து பணி மணிக்கு வந்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி