வணிகத்திற்காக இந்தியாவிற்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆளத் தொடங்கியது. 1874-ல் இந்த கம்பெனி இந்தியாவில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது. இந்த கம்பெனியை 2005-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா என்பவர் வாங்கினார். தற்போது இந்த நிறுவனம் ஆடம்பர தேநீர், காபி மற்றும் உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறது. மேலும் வரலாற்று நாணயங்களையும் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.