ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உரிய எச்சரிக்கை பலகையோ, அடையாளமோ இல்லாமல் போடப்பட்டுள்ள வேகத்தடை மீது ஏறி பறக்கும் வாகனங்கள் தொடர்பான பதறவைக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. குருகிராமின் கோல்ஃப் மைதான சாலையில் தான் இந்த வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பல சாலைகளைப் போலவே இந்த சாலையும் கவனிக்கப்படாமல் இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.