நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்தனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாகக் கடந்த 2021-ம் ஆண்டு திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார் நாக சைதன்யா, அவரை வரும் நவம்பரில் திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில், தான் சமந்தாவுடன் இருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யா நீக்கியுள்ளார்.