கே. ஜி. சாவடி: வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது!
கோவை மாவட்டம் கே. ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காடு சேர்ந்த சுரேஷ் (45), கடந்த 08. 11. 2024 அன்று வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 54, 00, 000 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர் கே. ஜி சாவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகாரின்படி, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுமித் நாகேஷ் சலுங்கே (25) மற்றும் சனீஸ் கோவிந்தன் சலுங்கே (35) ஆகியோர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் இன்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 41,00, 000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.