கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை, மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் BSNL அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றுதல், புதிய கல்விக் கொள்கையை கைவிடுதல், IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துதல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.