டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்கும் இல்லை- அமைச்சர் விளக்கம்

51பார்த்தது
கோவை சிங்காநல்லூர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தொற்று நோய்கள் பரவாமல் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பில்லாத வகையில் இஉக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற 15 ம் தேதிக்கு பின்பு தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும் எனவும் டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில்தான் அதிகம் எனவும் அதிமுக ஆட்சியில் கடந்த 2012ல் டெங்கு இறப்பு 66 பேர், 2017 ல் 65 பேர் எனவும் சுட்டிக்காட்டிய மா. சுப்பிரமணியன், தமிழக வரலாற்றில் அதிகப்படியான டெங்கு இழப்புகள் இதுதான் எனவும் இந்த ஆண்டில் டெங்கு காரணமாக ஆறு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் அதுவும் தனியார் மருத்துவமனை முறையான சிகிச்சை இல்லாதது, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது போன்ற காரணத்தால் உயிரிழப்பு எனவும் குறிப்பிட்டார். டெங்கு பாதிப்பு எங்கேயுமே இல்லை எனவும் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி