சூலூர் அருகே பாப்பம்பட்டிபிரிவில் இந்திய ஸ்பின்னிங் நூற்பாலை உரிமையாளர் சங்கம் ஆண்டு பேரவை கூட்டம் நேற்று(செப்.28) நடந்தது. இதில் நூற்பாலைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பஞ்சு 11% வரி விரிப்பதை நீக்க வேண்டும், அவ்வாறு செய்தால் இந்திய நூற்பாலைகள் உலக நாடுகளுடன் போட்டியிட முடியும்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சை நேரடியாக பஞ்சாலைகளுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும், விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. மாநில அரசு தற்போதைய நூற்பாலைகளின் நிலையை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை வருடா வருடம் உயர்த்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.