கொடநாடு வழக்கு -கோவில் பூசாரி, வங்கி நிர்வாகி ஆஜர்!

81பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக, கொடநாடு தேயிலை தோட்டத்தின் கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் ஒரு தனியார் வங்கியின் நிர்வாகி ஆகியோர் CBCID முன் ஆஜராகியுள்ளனர். CBCID தனிப்படை போலீசார், கொடநாடு தேயிலை தோட்டத்தின் கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி நிர்வாகிக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்படி, இருவரும் PRS வளாக அலுவலகத்தில் முகாமிட்டிருக்கும் தனிப்படை போலீசார் முன் ஆஜராகினர். தமிழ்நாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த வழக்கின் விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக பல முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயில் பூசாரி மற்றும் வங்கி நிர்வாகியின் வாக்குமூலம் வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி