தமிழகத்தில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இழிவாக பேசிய தீ. க-வை சேர்ந்த ஓவியா அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சூலூர் காவல் ஆய்வாளரிடம் நேற்று (டிச.,1) புகார் மனு அளிக்கப்பட்டது.
ஓவியா என்பவர் ஒரு கூட்டு அரங்கில் பேசிய பேச்சு ரெட்பிக்ஸ் என்னும் யூடியூப் சேனலில் வெளியானது. இதில் அவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை மிகவும் தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியது குறித்த ஆவணம் காவல் ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகவே உடனடியாக ஓவியாவை கைது செய்து சட்டப்படி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.