திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே திருமணத்துக்கு மறுத்ததாகக் கூறி கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த மாணவியை மகாதேவன் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த கோட்டூர் தோட்டம் பகுதியை சேர்ந்த மாணவி திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய அத்தை மகன் மகாதேவனை போலீசார் தேடி வருகின்றனர்.