சிங்காநல்லூர்: பாலியல் தொழில் குற்றச்சாட்டு - 8 பேர் கைது

66பார்த்தது
சிங்காநல்லூர்: பாலியல் தொழில் குற்றச்சாட்டு - 8 பேர் கைது
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில், ஏகேஜி நகரில் பாலியல் தொழில் நடத்த முயற்சி செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக சிங்காநல்லூர் ஏகேஜி நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர், பெண்களை காட்டி பாலியல் தொழில் நடத்த முயற்சி செய்ததாக போலீசில் நேற்று புகார் செய்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், முகமது இம்யாம் அலி, அல்பியா பானு, ஜெயபிரகாஷ், மாலு, சபானா, ஸ்ரீதேவி, ஜீவா, சதித்யா ஆகிய 8 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து சிங்காநல்லூரில் பொது இடங்களில் பெண்களை காட்டி பாலியல் தொழில் நடத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி