சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதுதவிர கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயமும் பெருமளவில் நடந்து வருகிறது. இந்நிலையில், திருப்புவனம் பகுதியில் பன்றிகளால் விவசாயம் 10 வருடங்களாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பன்றிகள் குறித்து ஆய்வு செய்ய வனத்துறை, கால்நடை துறை, வேளாண்துறை விலங்கியல் துறை, அதிகாரிகள் ஒருங்கிணைந்த குழு மாவட்டம் முழுவதும் ஆய்வை தொடங்கியுள்ளது.