கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் என்பருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், பார்வைத்திறன் அற்ற ரூபினி என்ற பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரியவரவே கற்பழிப்பு குற்றத்தில் இருந்து தப்பிக்க அவரையே இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பின்னர் தினமும் ரூபினியை சித்திரவதை செய்துள்ளார். இந்நிலையில் ரூபினி தற்கொலை செய்துகொண்டதாக அன்பழகன் கூறியுள்ளார். தற்போது சந்தேக மரணம் எனக்கூறி அன்பழகனை போலீசார் கைது செய்துள்ளனர்.