கோத்தகிரியில் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டாம் தேதி முதல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று காலை முதல் கோத்தகிரி, அரவேணு, கட்டபெட்டு, கீழ் கோத்தகிரி போன்ற பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர். தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வெழியே வர முடியாமல் தங்கும் விடுதியிலேயே முடங்கி உள்ளனர்.