குன்னூர் - Coonoor

புதிய நீதிமன்றம் கட்ட வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

கோத்தகிரி வக்கீல்கள் சங்க செயற்குழு கூட்டம் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைந்து நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்துடன், கோத்தகிரி வக்கீல்கள் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடப்பாண்டில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக பாலசுப்ரமணி, துணைத்தலைவராக ரவி, செயலாளராக கோபிநாத், பொருளாளராக முருகன், இணைச் செயலாளராக கவிதா, செயற்குழு உறுப்பினர்களாக மணிக்குமார், மாதன், மோகன், ராதாகிருஷ்ணன், நஞ்சன், உதய்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வீடியோஸ்

நீலகிரி
புதிய நீதிமன்றம் கட்ட வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
May 01, 2024, 14:05 IST/குன்னூர்
குன்னூர்

புதிய நீதிமன்றம் கட்ட வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

May 01, 2024, 14:05 IST