நீலகிரி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி இன்று உதகையில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் எதிர்வரும் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று உதகையில் உள்ள காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே விபத்துல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் நீலகிரி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் நிலைய அலுவலர் ஸ்ரீதரன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பட்டாசுகளை கடையில் வாங்கி செல்லும்போது மிக கவனமுடன் எடுத்துச் செல்ல வேண்டும், பட்டாசுகளை சமையலறையில் சேமித்து வைக்கக்கூடாது, பேருந்து நிலையம் கேஸ் குடோன் பெட்ரோல் நிலையங்களில் அருகாமையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது உள்ளிட்ட 12 அறிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் இந்த வருடம் மகிழ்ச்சியான தீபாவளியை உறவுகளோடு இனிமையாக கொண்டாட நீலகிரி மாவட்டம் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.