100 நாள் வேலை ஆட்களை குப்பை அள்ளும் வண்டியில்.....

77பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 100 நாள் வேலை ஆட்களை குப்பை அள்ளும் வண்டியில் ஏற்றி செல்லும் மேலூர் ஊராட்சி நிர்வாகம்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேலூர் ஊராட்சி இங்கு தலைவராக அதிமுகவை சேர்ந்த ரேணுகா தேவியும் துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த நாகராஜன் உள்ளனர் இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிக்கு செல்லும் 100 நாள் வேலை ஆட்கள் அதாவது அனைவரும் வயது முதிர்ந்த மூதாட்டிகள் கடந்த ஒரு வார காலமாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் குறித்தும் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப்பட்டு இன்று இறுதி நாள் என்பதால் 100 நாள் வேலைக்கு செல்லும் மூதாட்டிகளை ஊராட்சிக்கு குப்பை ஏற்றி செல்ல பயன்படுத்தும் குப்பை வண்டியில் ஏற்றி செல்ல முயன்றனர் அப்பொழுது பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்ததால் முதியோர்களை இறக்கிவிட்டு விட்டு சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி