ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்

55பார்த்தது
கூடலூர் அருகே நெலாக்கோட்டை கடைவீதியில் நடந்து சென்ற செவிலியர்களை தாக்கிய கால்நடை பரபரப்பு காட்சி. சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை விரட்ட பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என மலை மாவட்டம் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதுவரை சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள நெலக்கோட்டை கடைவீதியில் செவிலியர்கள் இருவர் தங்களது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று செவிலியரை தாக்கியதில் படுகாயம் அடைந்து சாலையில் விழுந்தார். காயமடைந்த செவிலியரை தாக்கிய கால்நடையிடம் மீட்ட சக செவிலியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். செவிலியரை மாடு தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியது.

டேக்ஸ் :