நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த சோலூர் ஜங்ஷன் குடியிருப்பு வளாக பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமையை செந்நாய் கூட்டம் வேட்டையாடி உண்ணும் காட்சி வெளியானதால் பழங்குடியின மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சோலூர் பகுதியில் தற்போது அதிக அளவிலான செந்நாய் கூட்டம் உலா வருவதால், இவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.