40 வரை மட்டுமே தற்போது விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை

62பார்த்தது
உதகை கேரட் விலை கிலோ ரூ20 முதல் 40 வரை மட்டுமே தற்போது விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ நூறு முதல் 140 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஊட்டி கேரட் விலை தற்போது மிகவும் விலை குறைந்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட் கேரளா, கர்நாடகா, சென்னை கோயம்பேடு போன்ற சந்தைகளில் விற்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கேரட் விலை மிகவும் அதிகரித்து இருந்தது. கிலோ ஒன்றுக்கு 100 முதல், 140 வரை ரூபாய் வரை விலை கிடைத்து வந்ததால் விவசாயிகளும் நல்ல லாபம் பார்த்து வந்தனர். இந் நிலையில் தீபாவளி பண்டகை நெருங்கி வரும் நிலையில் அதிக அளவிலான அறுவடை நடந்து வருவதால் விலையும் மிகவும் குறைந்து கிலோ ஒன்றுக்கு ரூபாய் 20 முதல் 40 வரை மட்டுமே கிடைத்து வருகிறது.
இதனால் கேரட் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி