குன்னூர் - Coonoor

குன்னூர்: வெலிங்டனில் ராணுவ பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி

குன்னூர்: வெலிங்டனில் ராணுவ பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்திய இசைக் குழுவில் சிறந்து விளங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பேக் பைப்ஸ் எனப்படும் இசைக்கருவி மூலம் தற்போதும் இசைக்கப்படுகிறது. 1600-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து ரெஜிமெண்ட் பிரிவுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த இசைக்கருவி, குன்னூர் ராணுவ வீரர்கள் குழுவினரால் இசைக்கப்படுகிறது. இந்த நிலையில் எம். ஆர். சி. ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ குழுவினரின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்றவாறு நடனமாடியது ராணுவ அதிகாரிகள், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இதனை பலர் கண்டு களித்தனர். இந்த குழுவினர் கடந்த ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பேண்ட் வாத்திய இசை இசைத்து, 2-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


நீலகிரி