நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து குன்னூர் மற்றும் அது சுற்றுவட்டார பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஹில்கிரோ ரன்னிமேடு ரெயில் நிலையம் இடையே மண்சரிவு மற்றும் பாறைகள் விழுந்தது.
மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7: 10 மணியளவில் இருந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த மலை ரயில் தற்பொழுது ஹில்க்ரோ ரயில் நிலையத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் தண்டவாளத்தில் விழுந்த பாறை மற்றும் மண் சரிவை சீர் செய்யும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ஆனது ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த பாறையில் மற்றும் மண் சரிவினை சீர் செய்யும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.