வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த ஆண்டு (2024) வெளியான ‘தி கோட்’ படம் தான் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. இப்படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், சத்யஜோதி நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண வேண்டும். அதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக வெங்கட்பிரபு கூறியுள்ளார்.