கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று (டிச.22) 'ஹாப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல், டிஜே உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது டிஜே பாடலுக்கு அங்கு கூடியிருந்த இளம்பெண்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.