திருநெல்வேலியில் நடந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக டிஜிபியின் அறிவுறுத்தலின் பேரில், நீதிமன்ற வளாகத்தின் நான்கு நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் கடுமையான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.