கோவை: புதிய மகளிர் குழு அமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம்!

57பார்த்தது
கோவை மாநகராட்சியின் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அலுவலகங்களில் புதிய மகளிர் குழு அமைப்பு மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் இன்று நடைபெற்றன. தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தெற்கு மண்டல வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் புதிய மகளிர் குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS, துணை மேயர் ரா. வெற்றி செல்வன், மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், உதவி ஆணையர் குமரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு மண்டல வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS, துணை மேயர் ரா. வெற்றி செல்வன், மண்டல தலைவர் வே. கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கிழக்கு மண்டல வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் புதிய மகளிர் குழு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS, துணை மேயர் ரா. வெற்றி செல்வன், மண்டல தலைவர் இலக்குமி, மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி