பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை. அதிலும் சில பழங்களில் பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்திருக்கும். அப்படியான ஒரு பழம் தான் 'நோனி' பழம். இளமையான தோற்றம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் போன்ற விஷயங்களுக்கு இந்த பழம் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோனி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. ஆற்றல் குறைவாக மற்றும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் நோனி பழச்சாறு குடிக்கலாம்.