கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி என்பவரின் மகன் சகாயராஜ் (60). இவர் நேற்று முன்தினம் (டிச.22) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாரோடு வெளியே சென்று விட்டார். மீண்டும் மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்கம் பூட்டு உடைந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த செல்போன், 2½ பவுன் தங்க நகைகள் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து சகாயராஜ் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.