கோவை: ஊதிய உயர்வு கோரி தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

74பார்த்தது
கோவை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள், தினசரி பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர். கோவை கோட்டத்தில் சுமார் 2000 பேர் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், பொங்கல் நேரத்தில் பணி வழங்கப்பட்ட பிறகு, தற்போது வரை சரியான பணி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறும் இந்த ஊழியர்கள், நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை தங்களுக்கு தினசரி பணி வழங்கி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி