கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லூரில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு நேற்று (டிச. 23) ஜென்டில்மேன் தோற்றத்தில் வந்த நபர் அங்கிருந்த பொருட்களை வித்தியாசமான முறையில் திருடி சிக்கிக் கொண்டார். அதன்படி, தனது ஜீன்ஸ் பேண்டில் பிரத்யேக பாக்கெட்களை அமைத்து பல பொருட்களை உள்ளே பதுக்கியிருக்கிறார். கடை ஊழியர்களிடம் அவர் சிக்கியபோது வீங்கிய ஜீன்ஸ் பேண்ட்டில் இருந்து எடுக்க எடுக்க பொருட்கள் வந்தன.