கோவை தடாகம் சாலையில் கணுவாய் அருகே உள்ள நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. வேனில் இருந்து கீழே விழுந்த சிலிண்டர்களை பொதுமக்கள் உடனடியாக எடுத்து சாலையோரம் வைத்தனர். மேலும், கவிழ்ந்த வேனையும் சாலையோரம் நிமிர்த்தி ஓரமாக நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வேனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.