கோவை: உழவர் பெருந்தலைவரின் 40ஆம் ஆண்டு நினைவு நாள்!

81பார்த்தது
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் 40 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கட்சி சார்பற்ற விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சார்பில் நேற்று சோமனூர் மின் நிலையத்தில் இருந்து அன்னூர் வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவு மண்டபம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 20 கிலோ மீட்டர் ஜோதியை எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் தலைவர் ஏ. கே சண்முகம், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடையில் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 100 நாட்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். பிப்ரவரி 6 ஆம் தேதி, என் எஸ் பி பழனிச்சாமி அவர்களின் மணிமண்டபத்தில் 100வது நாள் போராட்டத்தை நடத்த உள்ளோம். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அடுத்த கட்டமாக தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி