மீனவர்களின் வலையில் சிக்கிய கடல் பசு!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது மீனவர் செல்லத்துரைக்கு சொந்தமான வலையை கடலில் விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட அரிய வகை கடல் பசு ஒன்று சிக்கியது. வலையில் சிக்கிய கடல் பசுவை வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் விட்டனர். நன்றி: ஸ்பார்க் மீடியா