கடலூர் அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அதில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 78 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் 5 ஆண்கள், 6 பெண்கள் என 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த 11 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.