மும்பையில் நாளை காலை 9 மணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். கம்பீர் பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணிலேயே இந்திய அணி படுதோல்விகளை சந்தித்து வரும் நிலையில், சமீபத்தில் பிசிசிஐ தலைமையில் நீண்ட நேரம் Review மீட்டிங் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரும் தொடங்க இருப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.