சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார். தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தாக்கியதாக விக்னேஷ் கிண்டி போலீசாரின் விசாரணையில் தெரிவித்தார். தொடர்ந்து, அவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த நிலையில் தற்போது சைதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விக்னேஷை, போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.