மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் காலங்களில் மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள், காவல்துறை பாதுகாப்பு, உதவியாளர் நுழைவுச்சீட்டு போன்றவை செய்து தருவதாக அரசு தரப்பில் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நாளை (நவ. 15) முதல் அனைத்து பணிகளும் தொடரும் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.