ஜமைக்காவில் ரன்அவே பகுதியிலுள்ள ஹெடோனிசம் என்ற ரிசார்ட் 2000-ம் ஆண்டு முதல் நிர்வாண திருமண சேவையை வழங்கி வருகிறது. இங்கு 2003-ம் ஆண்டு 29 ஜோடிகளுக்கு நிர்வாண திருமணம் நடந்துள்ளது. இத்திருமண நிகழ்வில், மணமகன் - மணமகள், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார், விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் என அனைவரும் நிர்வாணமாக இருப்பார்கள். தற்போது, இத்திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.