கவாசகி நிறுவனத்தின் 2025 நின்ஜா ZX 4RR பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நின்ஜா ZX 4RR மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 42 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என தொடங்குகிறது. சமீபத்தில் இந்த பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஸ்போர்ட், ரோட், ரெயின் மற்றும் கஸ்டம் என மொத்தம் நான்கு ரைட் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.