மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி பழங்குடியினருக்கு இடையேயான தாக்குதல்கள் தொடர்கின்றன. சமீபத்தில், குக்கி இனத்தை சேர்ந்த 31 வயதான ஆசிரியை கொடூரமாக சீரழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் 8 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதும் எலும்புகள் முற்றிலும் உடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இடது தொடைக்குள் 5 சென்டிமீட்டர் நீளமுள்ள ஆணி இருந்ததும் கண்டறியப்பட்டது.