சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பெற்றோர் ஒருபோதும் நமது குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது. சமூகத்தை பார்த்து மாணவர்கள் மீது சுமை ஏற்றாதீர்கள். நல்ல மதிப்பெண் என்பது அளவுகோல் அல்ல, சமூகத்தில் நல்ல மனிதன் என்பதே ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பெற்றுத்தரும் நற்சான்று. மாணவர்கள் எது செய்தாலும் உறுதியுடன் மேற்கொள்ளுங்கள். உங்களுக்காக இந்த அரசு இருக்கிறது. அமைச்சராக நான் இருக்கிறேன்” என்றார்.