சென்னை கிண்டி மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை, இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வரலாம். இதுகுறித்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேச இருக்கிறோம்” என்றார்.