தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில், இந்திய வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதுகுறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது, “முதல் 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3வது வரிசையில் பேட்டிங் செய்யவா? என கேட்டார். அதனால், இந்த ஆட்டத்தில் 3வது வரிசையில் அவரை அனுப்பி வைத்தேன். வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்” என்றார்.